தடயங்களை மறைக்க 2 நாளாக சடலத்தை வீட்டில் வைத்திருந்த கொடுமை; 63 வயதில் மருத்துவ நிபுணருக்கு கள்ளக்காதல் தேவையா?.. கணவரின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற பேராசிரியை

போபால்: மத்திய பிரதேசத்தில், கள்ளக்காதல் தொடர்பில் இருந்த மருத்துவ நிபுணரின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி, மனைவி கொன்றார். மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் அடுத்த லோகநாத புரத்தை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர் நீரஜ் பதக் (63). இவரது மனைவி கல்லூரி பேராசிரியை மம்தா பதக் (55). இந்த  தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பேராசிரியர் நீரஜ் பதக்கிற்கும், மற்றொரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு  இருந்துள்ளது. இதை மம்தா பதக் கண்டித்தும், நீரஜ் பதக் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அந்த பெண்ணிடம் அவர் கள்ளத்தொடர்பில் இருந்துவந்தார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று தனது கணவரை கொன்ற மம்தா பதக், இரண்டு நாட்களுக்குப்  பிறகு (மே 1), தனது கணவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்துவிட்டதாக லோக்நாத் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்த போது, இறந்த நிலையில் கிடந்த நீரஜ் பதக்கின் சடலம் இரண்டு நாட்களுக்கு மேலாகி இருந்ததால் துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த போலீசார், நீரஜ் பதக் கொலை செய்யப்பட்டதை உறுதிசெய்தனர். அதையடுத்து மனைவி மம்தா பதக்கை கைது செய்து விசாரித்தனர்.  இதுகுறித்து சிவில் லைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜகத்பால் சிங் கூறுகையில், ‘மருத்துவரான நீரஜ் பதக்கிற்கும்,

மற்றொரு பெண்ணிற்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை மனைவி கண்டித்ததால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ நிபுணராக இருந்த நீரஜ் பதக், விருப்ப ஓய்வில் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர், தனது வீட்டில் இருந்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதற்கிடையே, தனது உயிருக்கு  அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரது மனைவி ஒரு நாள் அவரைக் கொல்லக்கூடும்  என்றும் வீடியோ ஒன்றை தனது வழக்கறிஞர் மூலம் நீரஜ் பதக் வெளியிட்டிருந்தார்.

போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த ஏப். 29ம் தேதி இரவு தனது கணவர் உணவு சாப்பிட்டுவிட்டாரா? என்று பார்க்க சென்றதாகவும், அவர் மயக்க நிலையிலேயே இருந்ததால் அடுத்த நாள் (ஏப். 30) மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்று நினைத்து தான் தூங்கிவிட்டதாகவும், அதற்கு அடுத்த நாள் (மே 1) காவல்நிலையத்தில் மம்தா பதக் புகார் அளித்தார். தாமதமாக புகார் அளித்ததால், மம்தா பதக் தான் கொலை செய்திருப்பார் என்று முடிவு செய்ேதாம். அதனால் அவரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வந்தோம். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது கணவர் நீரஜ் பதக், மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இரவில் சரியாக தூங்க மாட்டார். அதனால், அவருக்கு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தேன். அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்றேன். விஷம் கலந்த உணவை சாப்பிட்டவரின் உடலை இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருந்தால், பிரேத பரிசோதனையில் விஷம் சாப்பிட்டதற்கான அடையாளம் இருக்காது என்று ஒரு வீடியோவில் பார்த்தேன். அதனால், வீட்டிலேயே நீரஜின் சடலத்தை வைத்திருந்தேன். அதன்பின் போலீசில் புகார் அளித்தேன். ேபாலீசாரின் விசாரணையில் நான் எனது கணவரை கொன்றதை ஒப்புக் கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட மம்தா பதக்கிடம் இருந்து, மீதமுள்ள தூக்க மாத்திரைகள், மின்சாரம் பாய்ச்சி கொன்றதற்கான தடயங்கள் மீட்கப்பட்டுள்ளன’ என்றார். கள்ளக்காதல் விவகாரத்தால், கல்லூரி பேராசிரியை தனது கணவரை கொன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: