கோவாவில் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் பரபரப்பு

கோவா: தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரிலிருந்து வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டேங்கில் இருந்து ஆக்சிஜன் கசிவதை தடுக்க ஊழியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தாயணைப்பு வாகனங்கள் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதியானது முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு ஆக்சிஜன் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் எவ்வளவு டன் ஆக்சிஜன் வெளியேறியது என்பது குறித்து தகவல் அளிக்கப்படவில்லை. இதில் யாருக்கும் காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: