பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறு தலைமை செயலாளர் வேண்டுகோள்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்  விடுத்துள்ளார். அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம்  எனவும் வலியுறுத்தியுள்ளார்.  எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை 2006ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். எனவே இந்த செயலை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 

Related Stories:

>