திருத்தணி அரசு மருத்துவமனையில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ திடீர் ஆய்வு: நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார்

திருத்தணி: தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், அவற்றை் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, எஸ்.சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். அங்கு நோயாளிகளிடம் சிகிச்சை முறை பற்றி கேட்டறிந்தனர். அப்போது தலைமை மருத்துவர் ராதிகாதேவி, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அடிப்படை வசதிகள் குறித்து எம்எல்ஏவிடம் விளக்கம் அளித்தார்.

‘’போதிய ஆக்சிஜன் இருப்பு உள்ளது. ஆனால் மருத்துவர்கள், முதுநிலை செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும்’ எம்எல்ஏவிடம் தலைமை டாக்டர் தெரிவித்து, கடிதம் வழங்கினார். இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட எஸ். சந்திரன் எம்எல்ஏ, ‘’ உங்கள் பிரச்னை பற்றி முதல்வருக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: