புழல் சிறையில் சட்டத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

புழல்: புழல் சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திடீர் ஆய்வு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது. சென்னை புழலில் விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என மூன்று பிரிவுகள் உள்ளன. இச்சிறைகளில் சுமார் 100 பெண்கள் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை இங்குள்ள மூன்று சிறைகளில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இங்கு அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது?  கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து திடீரென ஆய்வு செய்தார். பின்னர், சிறைத்துறை சார்பில் நடத்தப்பட்டுவரும் பெட்ரோல் பங்க்கிலும் அவர் ஆய்வு செய்தார்.

அப்போது, சிறைத்துறை இயக்குநர் சுனில்குமார் சிங் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், அங்கிருந்த சிறைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி குறைகளை கேட்டறிந்தார். 40 நிமிடம் நடந்த இந்த ஆய்வினால் சிறையில் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories:

>