கொரோனா 2-ம் அலை தீவிரம்: இந்தியாவிற்கு ரூ110 கோடி ட்விட்டர் நிறுவனம் உதவி!

வாஷிங்டன்:கொரோனா மேலாண்மைக்காக இந்தியாவிற்கு டிவிட்டர் நிறுவனம் 15 மில்லியன் டாலர் (ரூ.110 கோடி) நிதிஉதவி அளித்துள்ளது. ‘மைக்ரோ பிளாக்கிங்’ எனப்படும் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டர் நிறுவனம், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடியை சமாளிக்க 15 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.110 கோடி) நிதிஉதவியாக வழங்கி உள்ளது. இதுதொடர்பாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் பேட்ரிக் டோர்சி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதியானது ‘கேர்’, ‘எய்ட் இந்தியா’ மற்றும் ‘சேவா இன்டர்நேஷனல் - யுஎஸ்ஏ’ ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்.

இதில், ‘கேர்’ 10 மில்லியன் அமெரிக்க டாலர், ‘எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் - யுஎஸ்ஏ’ ஆகியவை தலா 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: