ராமேஸ்வரம் அடுத்துள்ள புதுமடம் கடற்கரையில் அரிய வகை கடல் பசு கரை ஒதுங்கியது

ராமேஸ்வரம் அடுத்துள்ள புதுமடம் கடற்கரையில் மெகா சைஸ் கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். கரை ஒதுங்கிய கடல் பசுவை உடற்கூறு ஆய்வு செய்து வனத்துறையினர் அப்பகுதியில் புதைத்தனர். முகப்பகுதியில் பலத்த காயத்துடன் அடிபட்டு கடல் பசு இழந்துள்ளது. கரை ஒதுங்கிய கடல் பசு ஆண் இனத்தைச் சேர்ந்தது. இது சுமார் 700 கிலோ எடையும் 10 அடி நீளமும் 3 அடி சுற்றளவும் கொண்டது.

Related Stories:

>