தமிழகத்தில் 2வது நாளாக முதல்தவனை கொரோனா நிவாரண நிதியாக 2ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் விநியோகம்

திருவண்ணாமலை: தமிழகத்தில் 2வது நாளாக முதல்தவனை கொரோனா நிவாரண நிதியாக 2ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் முதல் தவணையாக  2ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் நேற்று முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய தாய்மார்கள் கொரோனா நிவாரண நிதி அனைத்து ஏழை பெண்களுக்கும், குடும்பதாரர்களுக்கும், தாய்மார்களுக்கும் பொருத்தமான நேரத்தில் கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்

இதனிடையே கோவை, திருவண்ணாமலை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பனி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. நியாயவிலை கடை ஊழியர்களிடம் நேரடியாக டோக்கன்களை பெற்ற பயனாளிகள் பெரிதும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>