திருவள்ளூரில் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த பெண் மருந்தாளுநர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த பெண் மருந்தாளுநர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷபீலா என்ற அவர் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் குழந்தைகள் நல திட்டத்தின் கீழ் ஒப்பந்த மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். கடம்பத்தூர் வட்டார மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகளிலும் அவர் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்.

இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஷபீலா தாம்பரம் சானடோரியம் அரசு மருத்துவமனையில் 5 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொற்றின் தீவிரம் அதிகரித்து ஷபீலா உயிரிழந்தார். மக்கள் பணியில் ஈடுபட்டிருந்தாலும் ஒப்பந்த தொழிலாளர் என்பதால் அவரை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என ஷபீலாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories:

>