மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு: உதவி மேளாலர் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்து இயக்குநர் நடவடிக்கை

மதுரை: மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக உதவி மேளாலர் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பால் உபபொருள் விற்பனையில் ரூ.13.71 கோடி முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆவின் நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரை ஆவின் நிறுவத்தில் முறைகேடுகள் நடந்து வருவதாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. பால் உபபொருட்கள் விற்பனையில் கிட்டதட்ட 13.71 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. 

புகார்களின் அடிப்படையில் சென்னை ஆவின் துணை பதிவாளட் அலெக்ஸ் தலைமையிலான அலுவலர்கள் குழு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மதுரை ஆவின் நிறுவனத்தில் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் முடிவில், உதவி மேலாளராக பணிபுரிந்த கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: