16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்: சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர். தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை கூட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சட்டப்பேரவை செயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்த தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, மக்கள் மனதில் இடம் பெற்று தேர்தலில் வெற்றி வாகை சூடிய முதலமைச்சர் என மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் அகர வரிசையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Related Stories:

>