பிராண வாயுவின் தேவை அதிகரித்து வருவதால் பிற மாநிலங்களுக்கு அனுப்பும் அளவுக்கு ஆக்சிஜன் கேரளாவில் இருப்பு இல்லை: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: பிராண வாயுவின் தேவை அதிகரித்து வருவதால் பிற மாநிலங்களுக்கு அனுப்பும் அளவுக்கு ஆக்சிஜன் கேரளாவில் இருப்பு இல்லை என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பினராயி விஜயன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதைய நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளதை சுட்டிக்காட்டிய பினராயி விஜயன், வரும் 15-ம் தேதிக்குள் அந்த எண்ணிக்கை 6 லட்சத்தை தொட்டு விடும் என அவர் கூறியுள்ளார். எனவே மே மாதம் 15-ம் தேதிக்குள் கேரளாவுக்கு 450 மெட்ரிக் டன் அளவுக்கு பிராண வாயு தேவை ஏற்பட்டிருப்பதாக தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கேரளாவில் இருக்கு வைக்கப்பட்டிருந்த 450 டன் ஆக்சிஜனில் தற்போது 86 டன் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் அளவிற்கு தங்களிடம் கை இருப்பு இல்லை என அவர் கூறியுள்ளார். இந்த நெருக்கடியான சூழலில் கேராளாவில் உற்பத்தி செய்யப்படும் 219 டன் ஆக்சிஜன் முழுவதையும் தங்களது உபயோகத்திற்க்கே அனுமதிக்க வேண்டும் என பிரதமரிடம் அவர் வலியுறுத்திருக்கிறார்.

Related Stories: