வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கழிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு கொரோனா தொடர்பான நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகைகளை அனுப்பப்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்தி அதற்கான வரி விலக்கு கொடுக்கும் போது வெளிநாடுகளில் இருப்பவர்கள் நிதி உதவி மற்றும் பொருளுதவி செய்வதற்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் கொரோனா தொடர்பான நிவாரண பொருட்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. என்று அழைக்க கூடிய வரிவிலக்கானது அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய அரசு கொரோனா பல்வேறு விதமான உத்தரவுகளை பிறப்பிக்கிறது. மத்திய அரசின் உத்தரவுகள் மீதான நடவடிக்கைகளை கண்காணிக்க கூடிய விதமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருக்க கூடிய விமான நிலையங்கள், துறைமுகங்களை கண்காணிப்பதற்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை துறைமுகம், வருவாய் நிர்வாக ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சியர்களும் இதற்கான நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எண்ணூர் துறைமுகத்திற்கு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு அந்த மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்துள்ளது தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

இவ்வாறாக ஒவ்வொரு இடத்திற்கும் தனித்தனியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்படும் பொழுது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே நிர்வாக ரீதியாக அணைத்தையும் கண்காணிக்க கூடிய விதமாக இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண உதவி தொகை வழங்குவதற்கு உதவும் விதமாக ஐ.ஜி.எஸ்.டி. என்னும் வரி விலக்கையும் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories:

>