கொரோனா பரவாமல் தடுக்க எவரெஸ்ட் சிகரத்தில் சீனா தடுப்பு கோடு

பெய்ஜிங்:  மலையேற்ற வீரர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக எவரெஸ்ட் சிகரத்தில் தடுப்பு கோடு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  சீனாவின் அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவத் தொடங்கி இருக்கிறது. உலகின் மிக உயரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்திற்கு மலையேற்றம் சென்ற  வீரர்கள் 30 பேர்   கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தின் அடிவாரமுகாமில் இருந்து இவர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

எவரெஸ்ட் சிகரம் சீனா -நேபாள எல்லையில் பரந்துள்ளது. வடக்கு சாய்வு பரப்பானது சீனாவுக்கு சொந்தமானது. இந்நிலையில் நேபாளத்தில் இருந்து வரும் மலையேற்ற வீரர்கள் மூலமாக கொரோனா நோய்  தொற்று பரவுவதை தடுக்க சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு சரிவு அல்லது  மலை யேற்றம்  செய்யும் வீரர்களுக்கு இடையேயான தொடர்பை தவிர்ப்பதற்காக மிக கடுமையான  நோய் தொற்று கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்கப்படும் என திபெத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, எவரெஸ்ட் மலையிலேயே தனது எல்லையை பிரிக்கும் வகையில்  தடுப்பு கோடுகளை சீனா  அமைக்க உள்ளதாக கூறி இருக்கிறது. இந்த கோட்டை தாண்டி நேபாள மலையேற்ற வீரர்கள் வர தடை விதித்துள்ளது. கொரோனா சீனாவில் ஆரம்பித்த நிலையில், கடுமையான பல நடவடிக்கைகள் மீது  அந்நாட்டு வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தி இருப்பதால் எவரெஸ்டில் கூட கோடு போட்டு தடுக்கும் முயற்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: