ஜெருசலேமில் ராக்கெட் குண்டுவீச்சு

ஜெருசலேம்: ஜெருசலேம் அல் அக்சா மசூதியில் நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நகரில் ராக்கெட் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெருசலேம் அக் அக்சா மசூதியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளை அப்புறப்படுத்த காசாவில் போராடும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு கெடு விதித்தது. இதைத் தொடர்ந்து அல் அக்சா மசூதி பகுதியில்  நேற்று இரவு வான்வழி தாக்குதல் சைரன் ஒலித்ததைத் தொடர்ந்து வெடிகுண்டு சத்தம் கேட்டது.

இது குறித்து ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இனியும் இஸ்ரேல் படைகள் வெளியேறாவிட்டால் தாக்குதல்  தீவிரமாகும்’’ என எச்சரித்தார். குண்டுவெடிப்பு பாதிப்பு குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related Stories: