மம்தா அரசில் 43 அமைச்சர்கள் பதவியேற்பு: சுவேந்து எதிர்க்கட்சி தலைவர்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, அவரது தலைமையில் 43 அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. கொரோனா தொற்று காரணமாக எளிமையாக நடந்த இவ்விழாவில், அமைச்சர்களுக்கு  ஆளுநர் ஜக்தீப் தன்கர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சில அமைச்சர்கள் காணொலி வாயிலாக பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து விரைவில் அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தவுள்ளார். இதற்கிடையே, சட்டப்பேரவையின்  எதிர்க்கட்சி தலைவராக திரிணாமுலில் இருந்து விலகி வந்த சுவேந்து அதிகாரியை பாஜ தேர்வு செய்துள்ளது.

Related Stories:

>