தொடரை வென்றது பாகிஸ்தான்: ஒயிட் வாஷ் ஆனது ஜிம்பாப்வே

ஹராரே: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டை இன்னிங்ஸ் மற்றும் 147 ரன் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் ெ தாடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வசப் படுத்தியது. தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 116ரன் வித்தியாசத்தில்   பாகிஸ்தான் வென்றது.இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியும் ஹராரேவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு  510ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.

அதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய ஜிம்பாப்வே 130ரன்னில் சுருண்டது. அதனால் பாலோ ஆன் பெற்ற ஜிம்பாப்வே 2வது இன்னிங்சை தொடர்ந்து. ஆட்டத்தின் 4வது நாளான நேற்று 231ரன் மட்டுமே எடுத்து ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது. எனவே இன்னும் ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் பாகிஸ்தான்  இன்னிங்ஸ் மற்றும் 147ரன் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. கூடவே தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்று ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது.

Related Stories:

>