இத்தாலி ஓபன்: ஜெனிபர் முன்னேற்றம்

ரோம்: ரோம் நகரில்   இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. ேபாட்டியின்  முதல் சுற்று ஒன்றில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி(13வது ரேங்க்), சீனாவின் ஷூய் ஜாங்(41வது  ரேங்க்) உடன் மோதினார். அதில் ஜெனிபர்  6-1, 6-4 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 16நிமிடங்கள் நடந்தது.

மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை  பெட்ரா குவித்தோவா(10வது ரேங்க்) 1-6, 6-0, 6-2 என்ற  செட்களில் போராடி போலாந்து வீராங்கனை  மக்டா லினைட்டை வீழ்த்தினார். குவித்தோவா 2வது  சுற்றுக்கு முன்னேறிய இந்த ஆட்டம் ஒரு மணி 35நிமிடங்கள் நடந்துள்ளது.

Related Stories:

>