தடுப்பூசி கொள்கையில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது: மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

புதுடில்லி: ‘கொரோனா தடுப்பூசி கொள்கையில் உச்சநீதிமன்றம் தலையிடக்கூடாது’ என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.கொரோனா தடுப்பூசி திட்டம்,விலை நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு  தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவிலான பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் திட்டங்கள் முற்றிலுமாக மருத்துவ நிபுணர்களாலும், அறிவியல்பூர்வமான கருத்துகளாலும்  உருவாக்கப்பட்டு உள்ளது.

எனவே இதில் நீதிமன்ற குறுக்கீடு இருக்கக் கூடாது.  அதிகளவில் நீதிமன்றம் தலையிட்டால், அது எதிர்பாராத தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும். தடுப்பூசி வழக்குவதில் மத்திய அரசு முறையாக கொள்கையை கடை பிடித்து வருகிறது.

 தடுப்பூசி விலை குறைந்தளவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல மாநிலங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுறது. இவ்வாறு அந்த  பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சில தொழில்நுட்ப கோளாறு காரணாக இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்படாமல், வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories: