அச்சப்பட்டு, ஓடி ஒளிந்தவர்கள் மத்தியில் கொரோனா பரிசோதனை செய்த 115 வயது ‘மிட்டாய்’ தாத்தா

தஞ்சை: கொரோனா பரிசோதனைக்கு அச்சப்பட்டு, ஓடி ஒளிந்தவர்கள் மத்தியில் ஆர்வத்துடன் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 115 வயது மிட்டாய் தாத்தாவை நகராட்சி  பணியாளர்கள் பாராட்டினர். தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு நேற்று கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது.

நகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கொரோனா பரிசோதனைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தனர். ஆனால் பலரும் வர மறுத்து, வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். இங்கே, ‘மிட்டாய்  வியாபாரம் செய்துவரும் 115 வயதான முகமதுஅபுகாசிர் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள், தாத்தாவை வெகுவாக பாராட்டினர்.

Related Stories: