ஆம்புலன்ஸ் இல்லை என்றதால் ஆத்திரம்: டாக்டரின் ஜீப்பை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற நோயாளி

ஈரோடு: ஈரோடு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (44). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். இவர் தவறி கீழே விழுந்ததில் கால் லேசாக முறிந்தது.  ஈரோடு அரசு மருத்துவமனையில் காலில் மாவு கட்டு போட்டனர். பின்பு தன்னை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டில் இறக்கி விடுங்கள் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டார்.

ஆனால் ஊழியர்கள், ‘‘ஆம்புலன்ஸ் வராது. கால்டாக்ஸி புக் செய்து வீட்டிற்கு செல்லுங்கள்’’ என்று கூறினர். இதற்கு கோவிந்தராஜ் முழு ஊரடங்கு என்பதால் கால்டாக்ஸி வரமறுப்பதால் ஆம்புலன்சில் அனுப்பி  வைக்க வேண்டும் என்று தகராறு செய்துள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு அருகே நின்ற  ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சொந்தமான மருத்துவ அலுவலர் பயன்படுத்தும் அரசு ஜீப்பினை எடுத்துக்கொண்டு கோவிந்தராஜ் பறந்தார்.

 இதை கண்ட ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னால் துரத்தி சென்ற போலீசார் சூரம்பட்டி நால்ரோடு அருகே மடக்கி பிடித்தனர். பின்னர்  இதையடுத்து ஸ்டேசனுக்கு கொண்டு வந்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: