தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாதது திருப்தி: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழக அரசு பல்வேறு உயரதிகாரிகளை இடமாற்றம் செய்தாலும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாமல் கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்கிறது என தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு கருத்து தெரிவித்திருக்கிறது. ஆக்சிஜன் தேவை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த கருத்தினை பதிவு செய்திருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் சிகிச்சை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரை அளிக்கும் வரை மத்திய அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசு பல்வேறு துறைகளில் அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது. தலைமை செயலாளர் முதல் பல்வேறு துறைகளில் மாற்றம் செய்து வந்தாலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டி சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாமல், அதே நிலையில் வைத்திருப்பது தொடர்பாக நீதிமன்றம் ஒரு திருப்தியான தகவலை தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் கொரோனா பரவலை ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து கண்காணித்து வருகின்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்படவிலை என்பதை கருத்தில் கொண்ட நீதிமன்றம் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு அவரை வைத்தே மேற்கொண்டு பணிகளை தொடர்ந்து வருவதற்கு திருப்தியை அளிக்கும் வகையில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளனர்.

Related Stories: