நெல்லை டவுனில் மாநகராட்சி சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்

நெல்லை: நெல்லை டவுன் மேல ரதவீதியில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை இலவசமாக வழங்குமாறு மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரிலும் மாநகர நல அலுவலர் சரோஜா, மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் உதவி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரிலும் டவுன் சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் நெல்லை டவுன் 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நெல்லை டவுன் மேல ரத வீதியில் சந்திப்பிள்ளையார் முக்கு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் நடைபயிற்சியாளர்கள், பெண்கள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு மாநகராட்சி பணியாளர்கள் கபசுர குடிநீர் வழங்கினர். இதில் சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவகுமார், இசக்கி மற்றும் தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: