கோஹ்லி, ரோகித் இல்லாமல் புதிய இந்திய அணி..! இலங்கையுடன் ஜூலையில் 3 ஒன்டே, 5 டி 20 போட்டி: பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி

கொல்கத்தா: ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் வரும் ஜூன் 18ம்தேதி முதல் 22ம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது. இதற்காக கோஹ்லி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி வரும் 2ம் தேதி லண்டன் புறப்படுகிறது. இந்த போட்டி முடிந்ததும் இங்கிலாந்துடன் ஆகஸ்ட் மாதத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் செப்டம்பர் 14ம் தேதி வரை நடக்க உள்ளது. இதனிடையே இந்திய அணி ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள்  போட்டி மற்றும் 5 டி.20 போட்டிகளில் விளையாட உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

எனிலும் இந்த தொடரில் கோஹ்லி, ரோகித்சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாட மாட்டார்கள். அவர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடுவார்கள். புதிய வீரர்கள் கொண்ட அணி இலங்கை செல்லும் என தெரிவித்துள்ளார். இந்த அணியில் தவான், புவனேஸ்வர்குமார், இஷான் கிஷன், சூர்யகுமார யாதவ், சாஹல், தீபக் சாகர், ஸ்ரேயாஸ் அய்யர், பாண்டியா உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. இதனிடையே ஐபிஎல்லில் எஞ்சிய போட்டிகளை நிச்சயமாக இந்தியாவில் நடத்த முடியாது. அதனை நடத்த ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்யவேண்டும். இதுபற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும், என்றார்.

Related Stories: