இந்திய மக்களை பற்றியே சிந்திக்கிறேன்: டிரன்ட்போல்ட் உருக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை அதி தீவிரமடைந்ததால்  ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் அணி நிர்வாகம் வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக சொந்த நாடு திரும்ப ஏற்பாடு செய்தது. இந்தியாவில் இருந்து பெரும்பாலான நாடுகளுக்கு நேரடி விமான போக்குவரத்து கிடையாது. இதனால் வேறு நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய டிரென்ட் போல்ட் வீட்டிற்கு சென்றுவிட்டார். மற்ற வீரர்களும் சென்றுவிட்டனர்.

இதுபற்றி டிரென்ட் போல்ட் தனது இன்ஸ்டாகிராமில் ‘‘ஐபிஎல் போட்டி முடிவுக்கு வந்து நான் கவலையாக சொந்த நாடு திரும்பிய நிலையில், எனது இதயம் இந்திய மக்களை பற்றியே சிந்திக்கிறது. அங்கு ஏராளமான மக்கள் பாதிக்கப்படும்போது, இதனுடன் எதையும் ஒப்பிட இயலாது. இது ஒரு துயரமான சம்பவம். இந்த நிலை விரைவில் மாறும் என நம்புகிறேன். என்னால் முடிந்தவரை இந்த அழகான நாட்டிற்கு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எங்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்ததற்காக மும்பை இந்தியன்ஸ்க்கு நன்றி. தயது செய்து கவனமான இருங்கள். நன்றாக வலிமையான பிறகு பார்ப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>