கடலூரில் தேவையின்றி வெளியே சுற்றி வருவோருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

கடலூர்: 12 மணிக்குள்ளாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் கடலூரில் சாலையில் வெளியே சுற்றி வரும் நபர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். கடலூரில் இதுவரை சுமார் 7.5 லட்சம் நபர்களுக்கு RTPCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 33,670 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடலூரில் இதுவரை 360 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 7,000 க்கும் அதிகமான நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கடந்த ஆண்டை விட தற்போது அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு முழு முடக்கத்தை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக காய்கறி, பால், மளிகை பொருட்களை வாங்குவதற்காக காலை முதல் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பொதுமக்கள் வெளியே வரவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, அந்த வழியாக வரும் வாகனங்களை எ நிறுத்தி தேவையின்றி வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா வந்தால் கொரோனா சங்கிலியை அறுக்க முடியாது. எனவே இதனை புரிந்து கொண்டு தாங்கள் வெளியே சுற்ற வேண்டாம் என கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்டம் முழுவதும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Related Stories: