தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலை துறை ஆபிசில் தேங்கும் கழிவுநீர்-அலுவலர்கள் அவதி

தேன்கனிக்கோட்டை :தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலைதுறை அலுவலக வளாகத்தில் தேங்கும் கழிவுநீரால், அலுவலர்கள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தேன்கனிக்கோட்டையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தின் பின்புறம் உள்ள 5வது வார்டு ஆசாத்தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், போதிய கால்வாய் வசதி இல்லாததால், நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் அலுவலகத்தை சுற்றி குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் அலுவலகத்தில் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அலுவலகத்தின் சுற்றுசுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் கலைச்செல்வன் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு பலமுறை கடிதம் மூலமும், நேரடியாகவும் தெரிவித்தும் இதுவரை கழிவுநீர் கால்வாயை சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அலுவலகம் சுற்றியும் கழிநீர் தேங்கியிருப்பதால் அலுவலர்கள் செய்வதறியாது தவித்து

வருகின்றனர்.

Related Stories: