கொரோனா கொல்லுயிரியால் திணறும் தமிழகம்!: தடுப்பு பணிகளை மேற்கொள்ள சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ.30 கோடி நிதியுதவி ..!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சன் டி.வி. குழுமம் சார்பில் 30 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று 2ம் அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சன் டி.வி. குழுமம் சார்பில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆக்சிஜன் சிலிண்டர், மருந்துகளையும்  சன் டி.வி. குழுமம் வழங்கவுள்ளது.  

சன் டி.வி. குழும ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தவும்  சன் டி.வி. குழுமம் உறுதி பூண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அதன் தாக்கம் என்பதே உயர்ந்துகொண்டே செல்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. 

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆம்புலன்ஸுலேயே பலர் சிகிச்சை பெரும் அவலம் நீடித்து வருகின்றது. இந்தியாவின் நிலை கண்டு கொரோனா தடுப்பு பணிக்காக  பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதனிடையே கொரானா தொற்றை தடுக்க, நிவாரண பணிகளுக்கு செலவிட நிதி திரட்டும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. 

அதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், நடிகர்கள், என பல்வேறு பிரபலங்கள் முதலமைச்சர், பிரதமர் நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சன் டி.வி. குழுமம் சார்பில் 30 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. 

Related Stories: