முழு ஊரடங்கு எதிரொலி தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

திருப்பூர் : திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

திருப்பூர் தென்னம்பாளையத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகர், காட்டுவளவு, பெரியார் நகர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தினசரி வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் வந்தனர். இதனால், மீன் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,`மீன் வாங்க கடந்த வாரத்தை விட இந்த வாரம் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும், மீன்கள் வரத்தும் அதிகரித்துடன் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது’ என்றார்.

போக்குவரத்து நெரிசல்:

திருப்பூர்  தென்னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தையில் நேற்று காய்கறி வாங்க  பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. பொதுமக்கள் பெரும்பாலானோர் பஸ்  பயணத்தை தவிர்த்து இரு சக்கர வாகனங்களில் வந்து சென்றனர். இதனால், உழவர்  சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: