தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா உறுதி: தனிமையில் இருப்பதாக ட்வீட்

சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் என்னுடன் தொடர்புடன் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

Related Stories:

>