உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது.. தினசரி பாதிப்பு, பலி எண்ணிக்கையில் இந்தியா நம்பர் 1

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,89,54,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,73,80,659 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 06 ஆயிரத்து 240 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,82,67,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,07,153 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 3,34,76,781 உயிரிழப்பு -  5,95,812, குணமடைந்தோர் - 2,64,39,712

இந்தியா   -   பாதிப்பு - 2,26,62,410, உயிரிழப்பு - 2,46,146, குணமடைந்தோர் -  1,86,65,266

பிரேசில்   -   பாதிப்பு - 1,51,84,790, உயிரிழப்பு - 4,22,418, குணமடைந்தோர் -  1,37,14,135

பிரான்ஸ்  -   பாதிப்பு -  57,77,087, உயிரிழப்பு -  1,06,392, குணமடைந்தோர் -   48,74,224

துருக்கி   -   பாதிப்பு -   50,31,332, உயிரிழப்பு -   43,029, குணமடைந்தோர் -   47,16,918

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா      - 48,80,262

இங்கிலாந்து - 44,34,860

இத்தாலி    - 41,11,210

ஸ்பெயின்   - 35,67,408

ஜெர்மனி    - 35,27,540

அர்ஜெண்டினா- 31,47,740

கொலம்பியா - 30,02,758

போலந்து    - 28,33,052

ஈரான்       - 26,54,811

மெக்சிக்கோ  - 23,64,617

Related Stories: