இன்று முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு பஸ்களில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பட்டால் மக்கள் நிம்மதி: சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியது

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு 1.70 மக்கள் சென்னையை விட்டு கிளம்பி சென்றனர். இதேபோல் பல்வேறு நகரங்களில் வசிக்கும்  பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்  ஒருபகுதியாக இன்று முதல் 24ம் தேதி வரையிலான காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, கார்கள் ஓடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களில் வசிக்கும் மக்கள், கடந்த இரண்டு நாட்களாக சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.

இவர்களில் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னையில் இருந்து திருச்சி, கோவை, சேலம், மதுரை,  திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு அதிகமான மக்கள் புறப்பட்டுச்சென்றனர். சென்னையில் இருந்து மட்டும் 1.70 லட்சம் பேர் பல்வேறு ஊர்களுக்கு பயணித்தனர். மேலும் கோவை, திருப்பூர், சேலம்  போன்ற தொழில் நகரங்களில் தங்கியிருந்து வேலை, தொழில்களில் ஈடுபட்டு வருவோரும், தங்களது ஊர்களுக்கு சென்றனர்.  சென்னை, சேலம், கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பணி, தொழில் நிமித்தமாக தங்கியிருக்கும்  பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், சம்மந்தப்பட்ட நகரங்களில் பரபரப்பாக இயங்கும் பகுதிகள் மக்கள் நடமாட்டம் குறைவாக வெறிச்சோடிக்காணப்பட்டது.

Related Stories: