மருத்துவர் பற்றாக்குறை மூதாட்டி, வாலிபர் பலி

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரிசில்லா(62). உடல்நலக்குறைவால் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு மருத்துவர்களோ, ஊழியர்களோ  கவனிக்கவில்லை. இதனால், அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  இதேபோல், அதே பகுதியை சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் ராஜா(28), நேற்று அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். சிகிச்சைக்காக   செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சென்றார். அங்கு, போதிய மருத்துவர் இல்லாததால் உயிரிழந்தார்.

Related Stories:

>