×

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு செவிலியர் பலி

சென்னை:  சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை ஒழிக்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை  ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா முதல் அலையின்போது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த நங்கநல்லூரை சேர்ந்த 58 வயதான தலைமை செவிலியர் கொரோனா  பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் தலைமை பெண் செவிலியர் ஆவர். இதேபோல் மதுரையில் நேற்று முன்தினம் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவரும் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 41 வயதான செவிலியருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 செவிலியர்கள்  உயிரிழந்துள்ளனர்.

Tags : Rajiv ,Gandhi ,Government ,Hospital , Nurse killed for corona at Rajiv Gandhi Government Hospital
× RELATED ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு