மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

ஆலந்தூர்: கிண்டி ஈக்காட்டுதாங்கல் கங்கையம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம். ஆட்டோ டிரைவர். இவரது மகன் மதன்(11). அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதன் தனது  நண்பர்களுடன் ஈக்காட்டுதாங்கல்  மாந்தோப்பு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள மதில் சுவர் மீது ஏறி மாமரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த மாங்காயை பறிக்க முயன்றான். அப்போது அங்கிருந்த  டிரான்ஸ்பார்மர் மீது அவனது கை பட்டதில்  அவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான். இதில் சம்பவ இடத்திலேயே மதன் பரிதாபமாக இறந்தான்.

Related Stories:

>