5 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: சேம.நாராயணன் பாராட்டு

சென்னை: மக்கள் தேசிய கட்சி தலைவரும் மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரிய முன்னாள் தலைவருமான சேம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக கட்சியின் தாராக மந்திரம் “செய்வதைதான் சொல்வோம், சொல்வதைதான்  செய்வோம்,” என்பதாகும் தந்தை வழியில் தமையன் என்பதை நாட்டுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  சென்னை தலைமை செயலகத்தில் முதல் 5  கையெழுத்துகள் உட்பட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அதில்  கொரோனா நிவாரணமாக 4000 அதிலும் முதல் தவணை 2000 இந்த மே மாதமே வழங்கப்படும்.  மே 16 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 குறைக்கப்படும்.  தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக  கட்டுப்பாட்டில் இயக்கும் சாதராண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து அட்டையில்லாமலும் பயணம் செய்யலாம் என்பதாகும்.  10 ஆண்டு காலம் திமுக ஆட்சி இல்லையே என்ற ஏக்கத்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின்  போக்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>