×

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா  தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், அமைச்சர்களை, முதல்வர் நியமித்துள்ளார்.
அதன்படி சென்னை மாவட்டத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கோவை  மாவட்டத்திற்கு உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மதுரை மாவட்டத்திற்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்  பி.மூர்த்தி, நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன்,

மீன்வளம், மீனவர் நலத் துறை  துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதேபோல், சேலம் மாவட்டத்திற்கு மின்சாரத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, திருச்சி மாவட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை  அமைச்சர் கே.என்.நேரு,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர்  இ.பெரியசாமி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஈரோடு மாவட்டத்திற்கு வீட்டு வசதித் துறை  அமைச்சர் சு.முத்துசாமி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருப்பூர் மாவட்டத்திற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வேலூர் மாவட்டத்திற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, விழுப்புரம் மாவட்டத்திற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Committee of Ministers ,Corona ,Chief Minister ,MK Stalin , Appointment of Committee of Ministers to carry out preventive work in 14 districts most affected by Corona: Order of Chief Minister MK Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...