×

கீழடியில் அகழாய்வு நிறுத்தம்

திருப்புவனம்: முழு ஊரடங்கு காரணமாக கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறுத்தப்படுவதாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த பிப். 13ம் தேதி தமிழக தொல்லியல்  துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. அதேநாளில் அகரம், கொந்தகை ஆகிய இடங்களிலும் பணிகள் தொடங்கின. மணலூரில் கடந்த 5ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கின. இதுவரை சுடுமண் பகடை, கல் உழவு  கருவி, பாசி, மணிகள், மூடியுடன் கூடிய பானை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி கீழடியில் அகழாய்வு பணிகள் நிறுத்தப்படுவதாக  தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவிற்கு பின் பணிகள் மீண்டும் தொடங்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Excavation stop below
× RELATED கீழடி அகழாய்வில் 8 ஊழியர்கள் மட்டும் பங்கேற்பு