கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 59 கோடி ஒதுக்கீடு

சென்னை,: தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கொரனா பரவலை தடுக்க மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  14 மாநகராட்சிகளுக்கு தலா 1 கோடி என 14 கோடியும்,  45 சிறப்பு கிரேடு நகராட்சிளுக்கு தலா 50 லட்சம் வீதம் மொத்தம் 22.50 கோடியும், 76 முதல் மற்றும் இரண்டாம் கிரேடு நகராட்சிகளுக்கு தலா 30 லட்சம் வீதம் 22.80 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு பிபிஇ கிட் முக கவசம், கையுறை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: