கொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை,:  கொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளை கண்காணிக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: கொரோனா  கட்டளை மையத்திற்கு ஒருங்கிணைப்பாளராக தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ்  நியமிக்கப்பட்டுள்ளார். கட்டளை மையத்தின் செயல்பாடு, தரம் குறித்து  ஆய்வு செய்ய அழகுமீனா என்ற அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தக்  குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், எஸ்.உமா, எஸ்.வினீத், கே.பி.  கார்த்திகேயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கையின் எண்ணிக்கை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு தேவை ஆகியவற்றை அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அமைக்கப்பட்ட கட்டளை மையத்திற்கு 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்104 என்ற எண் மூலம் கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தினை மக்கள் தொடர்பு கொள்ளலாம். அதன் மூலம் அரசு மருத்துவமனை படுக்கை, ஆக்சிஜன் படுக்கை , ரெம்டெசிவிர் மருந்து எங்கு கிடைக்கும், தனியார் மருத்துவமனை படுக்கை, எங்கு எவ்வளவு இடம் உள்ளது எனவும் 108 ஆம்புலன்ஸ் எங்கு உள்ளது என்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: