வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்ற முடிவு: பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை,: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது.  குறிப்பாக, கடந்த 39 ாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை உட்பட பல இடங்களில் அரசு மருத்துவமனைகள் படுக்கைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், வரும் மே 15ம் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கேற்றாற் போல்  கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி கொரோனா முதல் அலையின் போது, கடந்தாண்டு மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டன. தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதே போன்று மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்படாத அரசு கட்டிடங்கள், அரசு பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், வீட்டு வசதி, குடியிருப்பு வாரிய கட்டிடங்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்களில் கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது. முதற்கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 17 மாவட்டங்களில் அரசு கட்டிடங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. அந்த கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது.

Related Stories:

>