பாஜ எம்எல்ஏவின் 25 வயது மகனுக்கு தடுப்பூசி: முன்களப் பணியாளர் என முறைகேடு

டேராடூன்,: உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்க இருக்கின்றது. இந்நிலையில், கான்பூர் தொகுதி பாஜ எம்எல்ஏ குன்வார் பிரணப் சிங் சாம்பியனின் மகன் குன்வார் திவ்ய பிரதாப் சிங் சாம்பியன் (25) கடந்த வெள்ளியன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த 5ம் தேதி எம்எல்ஏ, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மருத்துவமனை கண்காணிப்பாளர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு தனது மகனுக்கும் தடுப்பூசி போடும்படி எம்எல்ஏ அழுத்தம் கொடுத்தார். எம்எல்ஏவின் பாதுகாவலர்கள் மிரட்டினார்கள்” என்றார். பாஜ எம்எல்ஏ கூறுகையில், “எனது மகன் முன்கள பணியாளராக செயல்பட்டு வருவதால் அவருக்கு தடுப்பூசி போடவேண்டிய சூழல் ஏற்பட்டது” என்றார்.எந்த முன்களப் பணியிலும் ஈடுபட எம்எல்ஏ மகனுக்கு முன்களப்பணியாளர் என முறைகேடாக தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

Related Stories:

>