சில்லி பாயின்ட்

* இளம் மல்யுத்த வீரரைக் கொன்றதாக தேடப்பட்டு வரும் ஒலிம்பியன் சுஷில் குமார் தொடர்ந்து தலைமறைவாக இருது வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

* மும்பை இந்தியன்ஸ் அணியில் இடெம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் நாடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஜிம்பாப்வே அணியுடன் ஹராரேவில் நடக்கும் 2வது டெஸ்டில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த அந்த அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 510 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (அபித் அலி 215*, அசார் அலி 126, நவுமன் அலி 97). ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் நேற்று 132 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது.

* ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் சேத்தன் சகாரியாவின் தந்தை கஞ்ச்சிபாய் சகாரியா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமானார். இந்த இக்கட்டான தருணத்தில் சேத்தன் சகாரியாவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்போம் என்று அணி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Related Stories:

>