கொரோனாவை விரட்ட கோமியம் குடிக்கும் பாஜ எம்எல்ஏ வீடியோ

பல்லியா: மாட்டு மூத்திரமான கோமியத்திற்கு கொரோனா வைரசை கொல்லும் ஆற்றல் இருப்பதாக அவ்வப்போது பாஜ தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் உபியின் பல்லியா மாவட்ட பைரியா எம்எல்ஏ சுரேந்திர சிங் இணைந்துள்ளார். இவர் ஒருபடி மேலே சென்று, கோமியத்தை குடிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘‘நான் நல்ல உடல் வலுவுடன் இருப்பதற்கான ரகசியமே கோமியம்தான். காலையில் வெறும் வயிற்றில் கோமியம் குடிங்க. ஒரு டம்ளர் தண்ணீரில் 2 மூடி கோமியம் ஊற்றி குடித்து விட வேண்டும். அதன்பின் அரை மணி நேரம் எதையும் சாப்பிடாதீங்க. பல நோய்களுக்கு குறிப்பாக இதய நோய்களுக்கு அருமருந்து கோமியம். கொரோனா அண்டாது’’ என்கிறார். ஆதாரமற்ற இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என சமூக வலைதளங்களில் அவருக்கு பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>