×

தமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு 236 பேர் மேலும் 28,897 பேருக்கு கொரோனா: 23,515 பேர் குணமடைந்தனர்: சென்னையில் 7,130 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் நேற்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 23,515 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 236 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,53,790 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 28,897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 7,130  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,80,259 ஆக உயர்ந்துள்ளது. 23,515 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,20,064 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 236 பேர் நேற்று உயிரிழந்தனர்.  அதிகபட்சமாக சென்னையில் 56 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 15,648 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் 500ஐ கடந்த தொற்று நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னை-7,130  செங்கல்பட்டு- 2,279, கோவை- 2,509, கடலூர்- 478, தருமபுரி- 353,  திண்டுக்கல்- 351, ஈரோடு- 691, கள்ளக்குறிச்சி-280, காஞ்சிபுரம்- 1089,  கன்னியாகுமரி- 515, கரூர்-291, கிருஷ்ணகிரி- 485, மதுரை- 1068,  நாகப்பட்டினம்- 211, நாமக்கல்- 216, நீலகிரி- 151, பெரம்பலூர்-141,  புதுக்கோட்டை- 236, ராமநாதபுரம்- 136, ராணிப்பேட்டை- 391, சேலம்-639,  சிவகங்கை-138, தென்காசி-385, தஞ்சாவூர்- 897, தேனி- 450,  திருப்பத்தூர்-284, திருவள்ளூர்- 1,768, திருவண்ணாமலை-578, திருவாரூர்-302,  தூத்துக்குடி- 884, நெல்லை-668, திருப்பூர்-641, திருச்சி-813,  வேலூர்-560, விழுப்புரம்- 383, விருதுநகர்-366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதையடுத்து தமிழகத்தில் நேற்று மட்டும் 28,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.Tags : Tamil Nadu ,Chennai , One day 236 deaths in Tamil Nadu and 28,897 in Corona: 23,515 cured: 7,130 infected in Chennai
× RELATED தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம்...