பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு; சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்: எல்.முருகன் பேட்டி

சென்னை: பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு 4 இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் பாஜக.,விற்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 4 எம்எல்ஏ.,க்கள் கிடைத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பாஜக.,வின் ஓட்டு சதவீதமும் அதிகரித்துள்ளது.கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி,மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வெற்றி வாகை சூடியுள்ளனர். மொத்தம் 20 இடங்களில் போட்டியிட்ட நிலையில் நான்கு இடங்களில் வென்றது.

இந்நிலையில் சென்னை தியாகராயநகர் பாஜக தலைமையகத்தில் கிஷன் ரெட்டி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது. இதில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள் என கூறினார்.

Related Stories: