சாதாரண கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே ஆக்சிஜன் படுக்கைகளை தேடி செல்ல வேண்டாம்: மா.சுப்பிரமணியம்

சென்னை: சாதாரண கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே ஆக்சிஜன் படுக்கை வசதி, ரெம்டெசிவிர் மருந்துகளுக்காக மக்கள் தேடி செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் சித்தா கோவிட் சிகிச்சை மையத்தை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர், சென்னை மாநகர ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடந்த ஆண்டு சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவத்தின் மூலம் பலரும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாக தெரிவித்தார்.

சென்னையில் 21 ஸ்கிரீனிங் சென்டர்கள் இருக்கும் நிலையில் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அதனை 30 ஸ்கிரீனிங் சென்டர்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Related Stories:

>