சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்துறை செயலாளராக இருந்து ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த அனுபவம் பெற்றதால் அவர் மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் கடலூர் மாவட்ட ஆட்சியராகவும் இருந்துள்ளார். முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பியாக இருந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். முதலமைச்சரின் தனிச்செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். வெ.இறையன்பு புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றார்.

Related Stories:

>