பிரேத பரிசோதனை செய்ய சான்று வழங்காமல் இழுத்தடிப்பு; பாலுச்செட்டிச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (54). இவர், கடந்த மாதம் அரசு பஸ் வசந்தா மீது மோதியது. இதில் பலத்த காய மடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  தீவிர சிகிச்சை பெற்று வந்த வசந்தா இறந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வசந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான சான்றிதழை அவரது மகனான ஆட்டோ டிரைவர் தான்தோன்றியிடம் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வழங்காமல் பாலு செட்டிச்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுரேஷ்பாபு இழுத்தடித்து வந்துள்ளார்.

இதையடுத்து பணியில் மெத்தனகதியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>