கொரோனா கட்டளை மையத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரீஸ் அகமத் ஐஏஎஸ் நியமனம் செய்து அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான கட்டளை மையத்திற்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா கட்டளை மையத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரீஸ் அகமத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கை வசதிகள் குறித்த விவரங்களை கட்டளை மையம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டளை மையம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் கட்டளை மையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டளை மையத்தின் செயலாளாராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில ஆக்ஸிஜனுக்கான நோடல் அதிகாரியாக உமா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புல நோய்த்தொற்றுக்கான நோடல் அதிகாரியாக வினித் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  அரசு மருத்துவ கல்லூரிக்கு நோடல் அதிகாரியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். தரத்தை கண்காணிப்பதற்கான நோடல் அதிகாரியாக அழகுமீனா நியமிக்க்பட்டுள்ளார். 

Related Stories:

>